தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் - DNL Drivers Association protest in Virudhunagar

விருதுநகர் : பழைய பேருந்து நிலையம் அருகில் டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dnl-drivers-association-protest-in-virudhunagar
dnl-drivers-association-protest-in-virudhunagar

By

Published : Jul 18, 2020, 12:57 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு துறையினர் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் சங்கத்தில் மாநிலம் முழுவதும் 60,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 100 நாட்களுக்கு மேலாக வேலைவாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக இழப்பீடு கேட்டு பல்வேறு வகைகளில் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில் ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும், ஓட்டுநர்களுக்கும் மாதம் 15,000 ரூபாய் வீதம் நிதி உதவியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details