விருதுநகர்: சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வைப்பாற்றில் அரசு மணல் குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பாதிக்கப்படும் என்பதால் அரசு மணல் குவாரி அமைப்பதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹச்.ராஜா அவர்களின் தலைமையில் இருக்கன்குடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் மணல் குவாரிக்கும் திமுக அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய H.ராஜா, இருக்கன்குடி வைப்பாற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும்.
எனவும் எல்லா ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நான் H.ராஜா எதிரானவன் என்றார். மேலும் இந்த பகுதியில் மணல் குவாரி அமையும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும் எனவே இந்த மணல் குவாரியை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் என் தலைமையில் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்கும் என்றார்.
மேலும் பேசிய H.ராஜா கோவில் நிர்வாகங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குறித்த பதில் அளித்த அவர் கோவில்களில் ஆய்வு செய்ய யார் செல்கிறார்கள் என்பது முக்கியம் என்றார். எனவே இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம் மாறி இருப்பதாகக் கூறும் சூழ்நிலையில் கோவில் நிர்வாகத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர்த்த எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பட்டியலில் தீபாவளி பண்டிகை இல்லை என்றார். பாஜக மாநில தலைவர் சட்டப்படியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பாஜக இல்லை என்று சொன்ன காலம் போய் இன்று தமிழ்நாட்டில் எதிர்கட்சி போல் பாஜக செயல்படுகிறது என்றார்.