விருதுநகர்: ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், அதுகுறித்து வழக்கறிஞர் ஒருவரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மணல் கொள்ளைக்கு துணைப் போகும் திமுக எம்எல்ஏ..? வைரலாகும் ஆடியோ... - sand theft
ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து வழக்கறிஞர் ஒருவரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபடும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவர் தங்கபாண்டியன். இவர் ராஜபாளையம் பகுதியில் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாவே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். பலமுறை புகார்களும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகார்கள் குறித்து அவர் வழக்கறிஞர் பால்வண்ணன் என்பவரிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம்