விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மல்லாங்கிணரில் திமுக முன்னாள்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், ”அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கும் பாண்டியராஜன் தொல்லியல் துறை அமைச்சராக இருப்பது சாபக்கேடு, புராதன சின்னம் என்பது வேறு நினைவுச்சின்னம் என்பது வேறு என பாண்டியராஜன் பேசியிருப்பது அவருடைய அறியாமையைக் காட்டுகிறது.
உள்நோக்கத்தோடு கோயில்களையும் இந்து சமய அறநிலையத் துறையையும் அடியோடு அழித்துவிடும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது, தலை சொன்னதை கை செய்யும் என்பதைப் பாண்டியராஜன் நிரூபித்திருக்கிறார்” எனச் சாடினார்.