சட்டப்பேரவைத் தேர்தல் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி! - தங்க பாண்டியன்
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றிபெற்றுள்ளார்.

ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி!
இந்தத் தேர்தல் முடிவுகளில் பல அதிரடி திருப்பங்களும், அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகிவருகின்றன. குறிப்பாக அதிமுகவின் முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துவருகின்றனர்.
அந்த வரிசையில், தொடர்ந்து முன்னிலை வகித்த ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். தங்கபாண்டியன் 3714 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.