தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருகிற 11ஆம் தேதி சொத்து வரி உயர்வுக்கெதிராக போராட்டம் - பிரேமலதா அறிவிப்பு - தேமுதிக

சொத்து வரி உயர்வைக் கண்டித்து வருகிற 11ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Apr 7, 2022, 6:48 PM IST

மதுரை:விருதுநகரில் தேமுதிக சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வந்தார். அப்போது, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'அனைத்து பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று (ஏப்.07) விருதுநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்னையை உணராமல் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசியை திரும்பப் பெறவேண்டும்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் அனைவரின் கருத்தும் நீட் வேண்டாம் என்பதுதான். ஆளுநரிடம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் டெல்லிக்கு கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆளுங்கட்சி மக்களை குழப்பக் கூடாது. கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

அதேசமயம், பெண்களும் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கும் அந்த பொறுப்புணர்வு வேண்டும். அதே சமயம் அவர்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும்.

முதலமைச்சரின் துபாய் பயணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சுற்றுலா என்கிறார்கள். முதலீட்டை அதிகரிக்க சென்றதாக கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது மக்களுக்கான பயணமா அல்லது அவர்களுக்கான பயணமா என்பது இன்னும் கொஞ்ச நாள்களில் தெரிந்துவிடும்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. 25 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை உயர்த்தலாம். ஆனால் 150 விழுக்காடு என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தாங்க முடியாத சுமை. இந்த விலைவாசி உயர்வை நிச்சயமாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details