தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு - சிறப்பாக பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

விருதுநகர்: கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் புத்தாடை வழங்கி நன்றி தெரிவித்தார்.

Diwali gift box
Diwali gift box

By

Published : Oct 27, 2020, 6:00 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இதில் மருத்துவர், செவிலியர், உள்பட 215 பேர் பணியாற்றிவருகின்றனர்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தாடை, இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனை ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், அவரது குடும்ப உறுப்பினர்கள் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details