தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு இயந்திரத்தில் கோளாறு: திமுக தொண்டர்கள் வாக்குவாதம் - EVM Machine Problem

விருதுநகர்: வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திமுகவிற்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விழுவதாக திமுக, அமமுக தொண்டர்கள் வாக்குச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு இயந்திரம் கோளாறு  வாக்கு இயந்திரம்  விருதுநகரில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு  EVM Machine Problem In Virudhunagar  EVM Machine  EVM Machine Problem  Disruption in the voting machine DMK, AMMK Members debate
Disruption in the voting machine DMK, AMMK Members debate

By

Published : Apr 6, 2021, 3:18 PM IST

விருதுநகர் நீராவி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விருதுநகர் சத்திரிய பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவுசெய்ய வந்தார். அப்போது, அவர் வாக்களிக்கச் சென்றபோது 1ஆவது பொத்தானை அழுத்தினால் இரண்டாவது இடத்தில் உள்ள பாஜக வேட்பாளருக்கு லைட் எரிந்ததாக வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, விருதுநகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக, அமமுக தொண்டர்கள் வாக்குப்பதிவு மையத்தில் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுக, அமமுக தொண்டர்கள்

இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சோதனை செய்ததில், இயந்திரத்தில் எந்தவிதக் கோளாறும் இல்லை என உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அதே இயந்திரத்தில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் செல்லூர் ராஜு வாக்களித்த இயந்திரத்தில் கோளாறு!

ABOUT THE AUTHOR

...view details