ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரை வழிமறைத்து மாற்றுத் திறனாளி உண்ணாவிரதம்! - காந்தி ஜெயந்தி

காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க மாவட்ட ஆட்சியர் வரும் வழியில் மாற்றுத் திறனாளி இளைஞர் பணி நியமன ஆணை வழங்க வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

மாற்றுத் திறனாளி உண்ணாவிரதம்
மாற்றுத் திறனாளி உண்ணாவிரதம்
author img

By

Published : Oct 2, 2020, 8:33 PM IST

விருதுநகர்: மாவட்ட ஆட்சியரை வழிமறித்து பணிநியமன ஆணை வழங்க வேண்டி மாற்றுத் திறனாளி இளைஞர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது சாத்தூரை சேர்ந்த சரவணக்குமார் (37) எனும் மாற்று திறனாளி இளைஞர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஐந்து வருடமாக தினக்கூலி அடிப்படையில் பல்வேறு துறை சார்ந்த வேலை செய்து வந்த நிலையில் ஊதியம் நிர்ணயம் செய்யாமல் பணியமர்த்தப்பட்டதால் கடந்த ஐந்து வருடகாலமாக முறையான ஊதியம் பெறாமல் வேலை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ள நிலையில் தற்போது வரை தினக்கூலியான இவருக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தினக்கூலியான சரவணனுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் வரும் வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறையினர், இதர அரசு அலுவலர்கள் இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் மாவட்ட ஆட்சியரின் மூலம் பணி நியமன ஆணை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அனுப்பி வைத்தனர். அதன் பின்பு காந்தி ஜெயந்தி கொண்டப்பட்டது.

இதையும் படிங்க: காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி

ABOUT THE AUTHOR

...view details