விருதுநகரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், முதியோர், வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாதவர்கள், தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குக்கு வாக்களிக்கலாம் என்ற வசதியை, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்கு அந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லாம் வீடு வீடாக சென்று தபால் வாக்களிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக மாநிலம் முழுவதில் இருந்தும், மாற்று திறனாளிகளிடமிருந்து சங்கத்திற்கு, புகார்கள் வருவதாகவும் குறிப்பாக தபால் வாக்களிக்க விருப்பமில்லாத மாற்றுத்திறனாளிகள் இடமிருந்து எழுத்துப்பூர்வமாக பதில் தரச் சொல்லி அலுவலர்கள் வற்புறுத்துவதாகவும் கூறுகிறார்கள்.