விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி
விருதுநகர்: பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு நாளை முதல் சில நிபந்தனைகளுடன் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.