தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழை: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை! - மலைக்குச் செல்ல

விருதுநகர்: தொடர் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

devotees-are-not-allowed-to-go-to-sathuragiri-hill
devotees-are-not-allowed-to-go-to-sathuragiri-hill

By

Published : Nov 27, 2020, 12:41 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தரை மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சதுரகிரியிலுள்ள கோவிலுக்குத் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மாதத்திற்கு எட்டு நாள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. மற்ற நாள்களில் பக்தர்கள் அப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பௌர்ணமியை ஓட்டி இன்று (நவ.27) முதல் வரும் 30ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details