தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்பாடுகளுடன் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! - virudhunagar sathuragiri temple news

விருதுநகர் : கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

devotees-are-allowed-to-go-to-the-sathuragiri-temple-with-restrictions
devotees-are-allowed-to-go-to-the-sathuragiri-temple-with-restrictions

By

Published : Apr 21, 2021, 3:34 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ள கோயில் நிர்வாகம், முழு ஊரடங்கான 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.மேலும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் ,60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ததால் தட்டுப்பாடா?

ABOUT THE AUTHOR

...view details