தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sathuragiri Hills: சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி.. நிபந்தனைகள் என்ன? - srivilliputhur sathuragiri hill

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sathuragiri Hills: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
Sathuragiri Hills: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

By

Published : Jan 3, 2023, 2:24 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலுக்கு, தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்கழி மாத பிரதோஷம் 4ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி பௌர்ணமி தினமும் வர இருப்பதால் பக்தர்கள் நாளை முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:101 கிருஷ்ணர் ஓவியங்களை குருவாயூர் கோயிலுக்கு பரிசளித்த இஸ்லாமியப் பெண்!

ABOUT THE AUTHOR

...view details