விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் குடும்பன், குடும்பர், பள்ளன், பள்ளர் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரிவில் உள்ள தேவேந்திர குல இனத்தவர் அனைவருக்கும், தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே இனத்தில் சேர்த்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர் கடத்த நவம்பர் மாதம் முதல் கருப்புச் சட்டை அணியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
”தேவேந்திர குல வேளாளர்” அரசாணை வழங்க போராட்டம்! - தமமுக கட்சியினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
விருதுநகர்: தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வழங்கிடக் கோரி தமமுக கட்சியினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் தமமுக கட்சியினர்
அதைத் தொடர்ந்து, இன்று மாநிலம் தழுவிய அளவில் 75 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அவர்கள் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி உண்ணாநிலை