தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவுக்காக சாலையைக் கடந்த புள்ளிமான் - வாகனம் மோதி உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில்  இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

deer death
deer death

By

Published : Jan 20, 2020, 12:45 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது.

இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து மலைப்பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூன்று வயதுடைய ஆண் புள்ளி மான் மீது மோதியதில், படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான்

இத்தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அடிபட்டு இறந்துக் கிடந்த புள்ளிமானின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும் மான் மீது எந்த வாகனம் மோதியது என்பது குறித்தும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'நீருக்காக சாலையைக் கடந்த புள்ளி மான்' - நொடியில் வாகனம் மோதி உயிர் பிரிந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details