தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக விருதுநகர் மாவட்டம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, 11 ஆயிரத்து 401 பேர் கரோனா தொற்றினால் விருதுநகரில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) மேலும் 54 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகரில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு! - Declining corona affection in viridhunagar
விருதுநகர்: கரோனா வைரஸ் தொற்று பரவல் சில தினங்களாக குறைந்து வருவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 380 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 916 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். தற்போது வரை மாவட்டத்தில் 159 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில நாள்களாக குறைந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.