விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (பிப்.12) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பலரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.