தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக அரசை கண்டித்து மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடத்த முடிவு - சைக்கிள் பேரணி

விருதுநகர்: அரசு கல்வி நிலையங்களை தனியாருக்கு தத்து கொடுப்பதை கண்டித்து மாநிலம் முழுவதும் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன்

By

Published : Apr 28, 2019, 10:35 PM IST

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கல்வி நிறுவன வளாகங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுகிறது. அதேபோல் தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் இதுவரை அந்த பள்ளிகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் பேட்டி


மேலும் அரசு கடந்த ஆண்டு மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டையை வழங்க தாமதப்படுத்தியது போல், இந்த ஆண்டு தாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். அரசு கல்வி நிலையங்களை தனியாருக்கு தத்து கொடுப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மே மாதம் கடைசி வாரத்தில் மாநிலம் முழுவதும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும். இந்த பேரணியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details