நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவையின்றி, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு: இளைஞர்களுக்கு தோப்புக்கரண தண்டனை! - Curfew
விருதுநகர் : கரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு காவல் துறையினர் தோப்புக்கரணம் போட வைத்தனர்.

ஊரடங்கை மீறியவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், தேவையின்றி வெளியில் சுற்றிய இளைஞர்களைக் காவல் துறையினர் பிடித்து, வெளியில் வர மாட்டோம் எனக் கூற வைத்து, தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இதையும் படிங்க:மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்