மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான வருவாய்த் துறை அனுமதிபெற்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையி்ல், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக நேற்று (அக்.23) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று நபர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.