விருதுநகரில் உள்ள சங்கரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பாக விழா எடுக்க வேண்டும்.
’அரசின் புதிய சட்டத்தால் விவசாயிகள் கொத்தடிமையாக்கப்படுவார்கள்’ - முத்தரசன் எச்சரிக்கை
விருதுநகர்: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யும் புதிய சட்டத்தால் விவசாயிகள் கொத்தடிமையாக்கப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.
விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்கின்ற புதிய சட்டத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக்கொள்கிறது. இதனால் விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமையாக நடத்தப்படுவார்கள் என்பதால் இதனை அமல்படுத்தக்கூடாது.
பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கக்கூடிய வகையில் மாநில அரசு நடந்துகொள்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை விட சிறந்த நடிகர்கள் பலர் உள்ள நிலையில், அவருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இதுபோன்ற உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.