தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கரோனா விதிமீறல்
அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கரோனா விதிமீறல்

By

Published : Apr 24, 2021, 5:38 PM IST

விருதுநகர் மாவட்ட நகர அதிமுக சார்பில், வெயிலுகந்த மாரியம்மன் கோயில் முன்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கரோனா விதிமீறல்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொது மக்கள், அதிமுக தொண்டர்கள் பலர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் இருந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கரோனா விதிமீறல்: வியாபாரிகளுக்கு அபராதம்

ABOUT THE AUTHOR

...view details