விருதுநகரில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அதன் தாக்கம் குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 26) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக 79 பேருக்கு உறுதி செய்யப்பட்டும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அறிய முடிகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.