தென்காசி :தென்காசி மாவட்டத்தி பிரதான சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு இன்று (டிசம்பர் 15) முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மெயின் அருவியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் கரோனா நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று மதிய நேரம்வரை 800க்கும் மேற்பட்டோர் அருவிகளில் வருகை தந்து நீராடி சென்றுள்ளனர்.