தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் பாலியல் வழக்கு - நால்வரை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு - virudhunagar sexual harassments

விருதுநகர் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேரையும் வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

By

Published : Apr 4, 2022, 8:30 PM IST

விருதுநகர்: இளம்பெண் கூட்டுப்பாலியல் கைது செய்யப்பட்ட வழக்கில் ஹரிகரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து ஏழு நாள்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று (ஏப். 04) விசாரணை முடிந்து மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர்படுத்தினர். சிபிசிஐடி தரப்பில் 4 பேரிடம் நடத்திய விசாரணை குறித்த ஆவணங்களை பெட்டியில் எடுத்து வந்து நீதிபதி முன்பு ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தொடர்ந்து சிபிசிஐடி மற்றும் அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு - காவல் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வர்!

ABOUT THE AUTHOR

...view details