தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்களை பிரித்த கரோனோ - விருதுநகர்

விருதுநகர்: திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே மணமகன் கரோனா பரிசோதனைக்கு சென்றார்.

கரோனா
கரோனா

By

Published : Jun 8, 2020, 1:23 AM IST

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் சென்னையைச் சேர்ந்த முகமது ஷரிப் என்பவருக்கும், விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமா பானு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனோ ஊரடங்கு உத்தரவு காரணமாக மணமகன் சென்னையில் இருந்ததால் திருமணம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நஜிமாபானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வரும் வழியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் ஷரிப்பின் ரத்த மாதிரியை எடுத்து கரோனோ பரிசோதனைக்கு விருதுநகர் மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நிச்சயித்தபடி மணமகன் முகமது ஷரிப்பிற்கும், மணமகள் நஜிமா பானுவுக்கும் எளிய முறையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திருமணம் நடந்தது. இதனையறிந்த அம்மாபட்டி ஆரம்ப சுகாதார குழுவினர் மணமகள் இல்லத்திற்கு சென்று ஷரிப்பிடம் கரோனோ பற்றி எடுத்துக் கூறி மதுரை அரசு இராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details