தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் 10 பேருக்கு கரோனா தொற்று: 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: கரோனா வைரஸ் தொற்று 10 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேரின் ரத்த மாதிரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

corona
corona

By

Published : Apr 3, 2020, 4:54 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பிய நபர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், அவர்களை அனைவரும் அழைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய நபர்களில், இன்று வரை 16 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரை மற்றும் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 9 நபர்களுக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனை!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 9 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அவர்களின் தொடர்புடைய நபர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"ஏப்ரல் 5 இல் 9 நிமிடங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details