தமிழ்நாடு

tamil nadu

'கரோன கவலையின்றி சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் மக்களின் நலனைப் பாதிக்கும்'

By

Published : Mar 20, 2020, 11:30 AM IST

விருதுநகர்: கரோனா பெருந்தொற்றுப் பரவலைப் பற்றி கவலைப்படாமல் தேவையற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருவது தமிழ் மக்களின் நலனைப் பாதிக்கும் என பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Corona virus: Continuing anti-CAA campaign will affect the welfare of Tamil people - BJP
கரோனா வைரஸ் : சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களின் நலனை பாதிக்கும் - பாஜக கருத்து!

ஸ்ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிக மக்கள்தொகை கொண்ட தேசத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உரிய மருத்துவச் சிகிச்சை வசதிகள் ஏற்பாடுகளை உறுதிசெய்வதில் தொடங்கி பல கட்டுப்பாடுகளை விதித்து, மாநிலங்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் வழங்கி பல முன்னேறிய நாடுகளைவிட மிக அதிக அளவில் எச்சரிக்கையோடு செயல்பட்டுகொண்டிருக்கின்றன.

வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பயணிகள் முற்றிலுமாகச் சோதனை செய்தபிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கான உதவிகள் செய்வதிலும் மத்திய அரசு கவனம் செலுத்திவருகிறது.

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இந்தியா அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சி.ஏ.ஏ.வை எதிர்த்து இன்னும் சிறுபான்மை மக்கள் போராட்டம் நடத்திவருவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. கரோனா பெருந்தொற்றுப் பரவலைப் பற்றி கவலைப்படாமல் தேவையற்றப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருவது தமிழ் மக்களின் நலனைப் பாதிக்கும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் கூத்தடிக்கின்ற போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பேட்டி

கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு - ஆதரவு போராட்டங்களைத் தொடரலாம். இதைத் தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. காவல் துறையும் அரசும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தடுக்க வேண்டும். நமக்குள் எந்தவித பிரிவினை எண்ணங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்தக் கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய கடமை இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க :'மார்ச் 22ஆம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்படும்'

ABOUT THE AUTHOR

...view details