உலகையே கரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி 25.03.2020 முதல் 14.04.2020 வரை பொதுவெளியில் பொதுமக்கள்வர வேண்டாம் என ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து தமிழ்நாடு அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கிள் அலச்சியம்: விரட்டியடித்த காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி கரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் பொதுவெளியில் வாகனங்களில் வந்ததால் காவல்துறையினர் அவர்களை விரட்டி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலையில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி!