விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் பகுதியில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைகள், முதியோர் மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் என சுமார் 200 பேருக்கு கரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.
10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்ட ஒரு மாதத்திற்குத் தேவையான சுமார் 1600 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பை ஹீலர் பவுண்டேஷன் நிறுவனர் சக்தி மூலம் சாத்தூர் காவல்துறை ஆய்வாளர் துரைப்பாண்டி வழங்கினார்.