தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருப்பம் உள்ளவர்கள் கரோனா நிவாரண உதவியை வழங்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தங்களது ஒரு நாள் ஊதியத்தை கரோனா நிவாரணதிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.