தமிழ்நாட்டில் நேறு புதிதாக 4,979 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
விருதுநகரில் நேற்று 265 பேருக்கு கரோனா! - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 265 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 265 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,393ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 1,295 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,071 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றின் காரணமாக நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.