தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் 2500ஐ கடந்த கரோனா; பீதியில் மக்கள்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்றி ஒரே நாளில் 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Corona past 2500 in the city; People in panic!
இதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 175 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,603 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,004 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.