விருதுநகர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதை தடுக்கும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் தேநீர் கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், அரசின் உத்தரவை மீறி சாத்தூரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர் திருப்பதி மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டனர்.
கரோனா கட்டுப்பாட்டை மீறிய கடைகள் - நகராட்சி நிர்வாகம் உத்தரவு! பின்னர் 12 மணிக்கு மேல் மெடிக்கல் மற்றும் ஒட்டல்களைத் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதை அடுத்து கடைவீதிகளும் முக்கிய சாலைகளும் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!