தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி - வெறிச்சோடிய ஆண்டாள் கோயில்!

விருதுநகர்: கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, விழாக்காலம் காண வேண்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடி போன ஆண்டாள் கோயில்!
வெறிச்சோடி போன ஆண்டாள் கோயில்!

By

Published : Apr 14, 2020, 8:46 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் தொற்றுத் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடி போன ஆண்டாள் கோயில்!

சித்திரை ஒன்றாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யக்கூடியப் பிரசித்திப்பெற்ற ஆண்டாள் கோயில் பக்தர்களின்றி வெறிச்சோடியது. கோயில் நடை திறந்து இருந்தாலும், பக்தர்களுக்கு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால், ஸ்ரீ ஆண்டாள் கோயில் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கக்கூடிய ராஐகோபுரம் அமைந்துள்ள வடபத்ர சயனர் கோவில் உள்ளிட்டவைகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.

இதையும் படிங்க....மாணவர்களால் நிரம்பி வழியும் அரசு ஆன்லைன் கல்வி இணையதளங்கள்!

ABOUT THE AUTHOR

...view details