விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், நத்தம்பட்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கரோனா தொற்று உறுதி - சோதனைச்சாவடி காவலர்கள்
விருதுநகர்: சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை
இதனைத்தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்லாது காவலர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் பரிசோதனை முடிவுகள் வரும்வரை, தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.