தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் உட்பட 18 ஊழியர்களுக்கு கரோனா தொற்று! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் உட்பட 18 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அலுவலகம் மூடப்பட்டது.

Corona infection confirmed for 18 employees including the commissioner in the Panchayat Union office!
Corona infection confirmed for 18 employees including the commissioner in the Panchayat Union office!

By

Published : Jul 28, 2020, 2:05 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் உட்பட 18 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒரு வாரத்துக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க்கு கடந்த ஒரு வாரமாக வந்து சென்ற பொதுமக்கள் தாங்களாக முன்வந்து, கரோனா பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details