விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஆயிரத்து 574 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் நேற்று (ஜூலை26) மேலும் 385 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக இதுவரை 5 ஆயிரத்து 959 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்து 290 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.