தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் மேலும் 376 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தடுப்பு நடவடிக்கை

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 376 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 573ஆக உயர்ந்துள்ளது.

Corona guarantees 376 people in one day in the award city today!
Corona guarantees 376 people in one day in the award city today!

By

Published : Jul 25, 2020, 8:04 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 5 ஆயிரத்து 193 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 376 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 573 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 3 ஆயிரத்து 116 பேர் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 357 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 52 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details