விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இம்மாவட்டத்தில் ஏற்கனவே 9 ஆயிரத்து 527 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 773ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகரில் இன்று ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா உறுதி! - Corona vulnerability increase in the award city
விருதுநகரில் இன்று ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா உறுதி
மேலும் இதுவரை 7 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூல உயிரிழப்பு எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள சிறப்பு வார்டில் ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!