விருதுநகரில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதன் வேகம் குறைந்தபாடில்லை.
ஒரு வயது பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: ஒரு வயது பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வசித்துவந்த பகுதி சுகாதாரத் துறையின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட குகன் பாறை கிராமத்திற்கு டெல்லியிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர் மதுரையில் கரோனா பரிசோதனை செய்துவிட்டு வந்த நிலையில், தற்போது அவரது ஒரு வயது குழந்தைக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அக்குழந்தையை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சுகாதார அலுவலர்கள் சேர்த்துள்ளனர். அவர் வசித்து வந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.