தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி சந்தை வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா! - Corona for vegetable market traders

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்காலிக காய்கறி சந்தை வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்கறி சந்தை வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா
காய்கறி சந்தை வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா

By

Published : Jul 25, 2020, 6:11 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தனியார் பள்ளியில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

மேலும் காய்கறி சந்தையில் காய்கறி வாங்கிச் சென்ற பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வருவாய் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கிலும் உணவு... நல்லுள்ளங்களை வாழ்த்தும் தெரு நாய்கள்!

ABOUT THE AUTHOR

...view details