தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் 100-ஐக் கடந்த கரோனா உயிரிழப்பு! - கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

விருதுநகர்: மாவட்டத்தில் கரோனா வைரஸுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளது.

Corona fatality past 100 in Virudhunagar!
Corona fatality past 100 in Virudhunagar!

By

Published : Aug 3, 2020, 10:51 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 8,495 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) மேலும் 348 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,843 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மருத்துவமனையில் இதுவரை சிகிச்சைப் பெற்று வந்த 6,336 பேர் சிகிச்சை முடிந்து, பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 2,402 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரோனா காரணமாக இன்று மட்டும் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details