தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தினந்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
விருதுநகரில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - corona virus
விருதுநகர்: இன்று (ஆகஸ்ட் 10) மட்டும் 189 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 155ஆக அதிகரித்துள்ளது.
![விருதுநகரில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! விருதுநகர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:48:44:1597069124-tn-vnr-06-corona-attack-vis-script-7204885-10082020192424-1008f-1597067664-1106.jpg)
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 10) மட்டும் 189 பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 155ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 8 ஆயிரத்து 421பேர் வீடு திரும்பியுள்ளனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் 1,595 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.