விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 12) புதிதாக 246 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,073ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் நான்கு பேர் அம்மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகரில் 2000ஐ கடந்த கரோனா பாதிப்பு - விருதுநகர் கரோனா வைரஸ்
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.
Corona virus
மேலும், இதுவரை 919 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க 16 தெருக்கள் மூடல்; காஞ்சி சார் ஆட்சியர் ஆய்வு!