தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு - ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு - விருதுநகர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை

விருதுநகர்: கரோனா பாதிப்பு எண்ணிக்கை விருதுநகர் மாவட்டத்தில் 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 377 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Covid-19 attack
கரோனா பாதிப்பு

By

Published : Aug 4, 2020, 9:09 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 8 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) மேலும் 424 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 269 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதிலுமிருந்து 6 ஆயிரத்து 783 பேர், நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 377 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நோய் தொற்றின் காரணமாக 3 பேர் இன்று மட்டும் உயிரிழந்தனர். மேலும், தற்போது வரை 109 பேர் விருதுநகர் மாவட்டத்தில் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: விருதுநகரில் நடைமுறைக்கு வந்த நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம்!

ABOUT THE AUTHOR

...view details