விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 21ஆம் தேதி அதிமுக சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், அவரை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ராஜா சொக்கர் தலைமையில் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்