தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கான வேட்புமனு பரிசீலனை! - சட்டப்பேரவைத் தேர்தல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

election

By

Published : Mar 20, 2021, 10:06 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தேர்தல் அலுவலர் புஷ்பா தலைமையில் நடைபெற்றது.

இந்தப் பரிசீலனை கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அதிமுக சார்பில் ரவிச்சந்திரன், அமமுக சார்பில் ராஜவர்மன், திமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் ரகுராமன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டி உள்ளிட்ட 27 மனுக்கள் பெறப்பட்டன.

மொத்தம் 40 மனுக்களில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 13 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதேபோல் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 31 வேட்புமனு தாக்கல்பெறப்பட்டது.

இதில் 11 வேட்புமனு நிரகரிக்கப்பட்டு 20 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேபோல் திருச்சுழி தொகுதியில் தாக்கல்செய்யப்பட்ட 31 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details