விருதுநகர்:சாத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் சாத்தூர் காங்கிரஸ் கட்சி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்து நாட்டுக்கும் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருக்கும். அங்கு நடக்கு சம்பவங்கள் கவலையளிக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. இலங்கையில் ஜனநாயக முறையில் அமைய இருக்கும் அரசுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தியாவில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப் பூர்வமான கவுன்சிலாக இருக்க வேண்டும். அது சர்வாதிகார கவுன்சிலாக இருக்கக்கூடாது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். அப்படி பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு இல்லை.
மாநில அரசின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு செயல்படும் ஜிஎஸ்டி கவுன்சிலாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலை வைத்து ஒன்றிய அரசு, மாநில அரசுகளை வஞ்சிக்கிறது. பல மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி பிடிப்பை திருப்பி வழங்காமல் உள்ளது” என குற்றம் சாட்டினர்.
இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட காங். எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பழைய பென்ஷன் திட்டத்தை ஆதாரிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போல் தமிழ்நாட்டிலும் நிதியமைச்சர் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதே சமயம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது திமுகவின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதல் ஆர்ப்பாட்டம் புறக்கணித்த சூர்யா